நாடளாவிய எதிர்ப்பு வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய இன்றும், நாளையும் எதிர்ப்பு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளது.
இது தொடர்பில் ஒருங்கிணைப்பு மத்திய நிலையத்தின் பதில் இணைப்பாளர் வசந்த சமரசிங்க தெரிவிக்கையில் இந்த வரவு – செலவு திட்டத்தில் பல்வேறு தனியார் துறைகளை மயப்படுத்துவதற்கு திட்டமிட்டுள்ளது.
இதனை தோற்கடிக்கவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதில் துறைமுகம், சுகாதாரம், வர்த்தக வலயங்கள், எரிபொருள் கூட்டுத்தாபனம், நீர்ப்பாசனம், விருந்தகம் உள்ளிட்ட தொழிற்சங்க பிரதிநிதிகள் ஈடுபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.