ஊர்வசி ரவுத்தலா இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்டை காதலிப்பதாக வலைத்தளத்தில் தகவல் பரவி விமர்சனத்துக்கு உள்ளானார். பலரும் அவரை கேலி மற்றும் அவதூறு செய்து வலைத்தளத்தில் பதிவுகள் வெளியிட்டனர்.
ஊர்வசி ரவுத்தலா – ரிஷப் பண்ட் இதற்கு ஊர்வசி ரவுத்தலா விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறும்போது, ”ஆர்பி என்று ராம் பொத்தினேனியை நான் குறிப்பிட்டேன்.
ஆனால் ரிஷப் பண்டை தான் அப்படி அழைத்தேன் என்று பலரும் யூகமான வதந்திகளை பரப்பி என்னை கேலி செய்கிறார்கள்.
எதையும் முழுமையாக விசாரிக்காமல் நம்பிவிடும் போக்கு சரியல்ல. கிரிக்கெட் வீரர்களோடு நடிகர், நடிகைகளை ஒப்பிடுவது முறையல்ல. அவர்கள் நாட்டுக்காக விளையாடுவதால் மதிக்கப்படுகின்றனர்” என்றார்.


















