அரச வளங்களை பாதுகாப்பதாக கூறி வந்த அரசாங்கம் எவ்வாறு மின்சார சபையை எட்டாக உடைக்கும் என எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல கேள்வியெழுப்பினார்.
நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர், இவ்வாறான விடயங்களை செய்வதற்கு இந்த அரசாங்கத்திற்கு ஆணை உள்ளதா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
எவ்வாறாயினும் இது குறித்து அமைச்சரவையில் பேசப்படவில்லை என்றும் செய்திகளை கொண்டு முடிவுக்கு வர வேண்டாம் என்றும் சபை முதல்வர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த லக்ஷ்மன் கிரியெல்ல “செய்தித்தாள்களில் வந்ததைப் பற்றி நான் பேசவில்லை. அந்த குழுவில் நானும் இருக்கிறேன்.இதுபற்றி அமைச்சர் காஞ்சன அங்கு கூறினார்” என்கிறார்.