அரசியலில் பெண்களுக்கு அதிக சதவீத ஒதுக்கீடு செய்ய வேண்டும் என உள்ளூராட்சி சபை உறுப்பினர் சம்பிக்க நிறைஞ்சலி தெரிவித்துள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து அவர் கருத்து தெரிவிக்கையில் பெண்களுக்கு 56% வீதம் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தரவேண்டும். ஆனாலும் இங்கே குறைவான வாய்ப்புக்களே உள்ளது.
பல துறைகளில் பெண்களின் பங்களிப்பு அதிகமாகவே உள்ளது. ஆனால் அரசியலில் பெண்களின் பங்களிப்பு குறைவாக உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை பெண்கள் அரசியலிற்குள் வருவதற்கு கணவர் இறந்ததாலோ அல்லது தமது குடும்பம் அரசியலில் இருப்பதாலோ நுழைகின்றனர்.
உதாரணமாக சந்திரகா குமாரதுங்கவாக இருக்கட்டும் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவாக இருக்கட்டும் இவ்வாறான சூழ்நிலைகளிலே அரசியலிற்கு வந்தனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.