ஐரோப்பிய ஒன்றியம், ஜி7 மற்றும் அவுஸ்ரேலியா ஆகிய நாடுகள் ஒப்புக்கொண்ட ரஷ்ய கடல்வழி கச்சா எண்ணெயின் விலை வரம்பு அமுலுக்கு வந்துள்ளது.
இன்று (திங்கட்கிழமை) அமுலுக்கு வந்த பீப்பாய் ஒன்றுக்கு 60 டொலர்கள் என்ற உச்சவரம்பு, உக்ரைனில் அதன் போருக்கு நிதியளிக்கும் ரஷ்யாவின் திறனைக் கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
அதே நேரத்தில் அது உலகளாவிய சந்தைக்கு தொடர்ந்து வழங்குவதை உறுதிசெய்கிறது.
எவ்வாறாயினும், உற்பத்தியைக் குறைக்க வேண்டியிருந்தாலும், இந்த நடவடிக்கைக்கு கட்டுப்பட மாட்டோம் என்று ரஷ்யா கூறியுள்ளது.
கடல் வழியாக ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தடை மற்றும் அமெரிக்கா, கனடா, ஜப்பான் மற்றும் ஐக்கிய இராச்சியம் போன்ற நாடுகளின் உறுதிமொழிகளுக்கு மேல் இந்த வரம்பு வருகிறது.
இதன் பொருள் ரஷ்ய எண்ணெய் பீப்பாய் ஒன்றுக்கு 60 டொலர்களுக்கு சமமான அல்லது அதற்கும் குறைவான விலையில் மட்டுமே விற்கப்படும். ஜி7 மற்றும் ஐரோப்பிய டேங்கர்கள், காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் கடன் நிறுவனங்களைப் பயன்படுத்தி மூன்றாம் தரப்பு நாடுகளுக்கு அனுப்பப்படும். உலகின் முக்கிய ஷிப்பிங் மற்றும் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் ஜி7 நாடுகளில் அமைந்துள்ளதால், ரஷ்யா தனது எண்ணெயை அதிக விலைக்கு விற்பதை கடினமாக்கும்.
இந்த நடவடிக்கையை ஏற்றுக்கொள்ளாத நாடுகள் ரஷ்ய எண்ணெயை விலை வரம்பிற்கு மேல் வாங்கலாம், ஆனால் மேற்கத்திய சேவைகளைப் பயன்படுத்தாமல், அதை வாங்க, காப்பீடு அல்லது கொண்டு செல்லலாம்.
‘பல வளர்ந்து வரும் பொருளாதாரங்கள், குறிப்பாக ஆசியாவில், விலை வரம்;பு கொள்கைகளைக் கடைப்பிடிக்கும் என்பதற்கான தெளிவான சமிக்ஞைகள் எங்களிடம் உள்ளன,’ என்று ஒரு ஐரோப்பிய அதிகாரி கூறினார்.
ஆனால், உலகின் இரண்டாவது பெரிய எண்ணெய் ஏற்றுமதியாளரான ரஷ்யா, இந்த வரம்பை ஏற்காது என்றும் அதற்கு உட்பட்ட எண்ணெயை விற்க மாட்டோம் என்றும் கூறியது.