சட்டத்தை அமுல்படுத்தும் பிரிவினரால் கைப்பற்றப்படும் ஹெரோயின் பின்னர் மீண்டும் சந்தைக்கு வரும் நிலை காணப்படுவதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நீதி, சிறை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சின் செலவீனங்கள் மீதான வரவு செலவுத் திட்ட குழு நிலை விவாத்தின் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
ஹெரோயினை கைப்பற்றும் பொலிஸ் அதிகாரிகளே அதனை மக்களிடமே திருப்பி அனுப்புவதை அண்மைக்காலமாக காணக்கூடியதாக இருப்பதாக சுட்டிக்காட்டினார்.
அவ்வாறான தவறுகளை செய்யும் அதிகாரிகளுக்கு எதிராக சட்டம் அமுல்படுத்தப்படும் என்றும் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.