சீரற்ற வானிலையால் கிளிநொச்சி மாவட்டத்தில் 172 குடும்பங்களைச் சேர்ந்த 585 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட இடர் முகாமைத்துவப் பிரிவின் புள்ளி விபரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் 34 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும், 42 குடும்பங்களைச் சேர்ந்த 124 பேர் பாதுகாப்பான அமைவிடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் 128 குடும்பங்களைச் சேர்ந்த 448 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 19 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது. 21 குடும்பங்களைச் சேர்ந்த 61 பேர் இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவில் 36 குடும்பங்களைச் சேர்ந்த 106 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 7 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது. 20 குடும்பங்களைச் சேர்ந்த 59 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் 05 குடும்பங்களைச் சேர்ந்த 22 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 05 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது. 01 குடும்பத்தைச் சேர்ந்த 04 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் 03 குடும்பங்களைச் சேர்ந்த 09 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 03 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.
பாதிப்புக்கள் தொடர்பான தகவல்களை மாவட்ட இடர் முகமைத்துவ பிரிவு அவ்வந்த பிரதேச செயலகங்கள் ஊடக தகவல்களை திரட்டி வருகின்றது.