போதைப்பொருள் பாவனைக்கு எதிராக பயிற்சிகளை வழங்கும் செயற்திட்டம் நடைபெற்றிருந்தது.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) வழக்கம்பரை பிரதேசசபையில் இந்த செயற்திட்டம் நடைபெற்றது.
இந்த நிகழ்வினை ஹெல்திலங்கா மற்றும் சங்கானை பிரதேச இளைஞர் கழக சம்மேளனம் என்பன இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.
குறித்த நிகழ்வில் ஹெல்தி லங்கா நிறுவனத்தின் வடக்கு மாகாண இணைப்பாளர் பிரேமராஜா, சங்கானை பிரதேச இளைஞர் சம்மேளனத்தினர் மற்றும் இளைஞர்கள் யுவதிகள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.