அம்பாறை, மன்னார் நகர சபைகளை மாநகர சபையாக தரமுயர்த்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
தற்போதுள்ள உள்கட்டமைப்பு மற்றும் மனித வளத்தைப் பயன்படுத்தி, கூடுதல் வளங்களைச் செலவிடாமல், நகர்ப்புற வளர்ச்சித் தேவைகளை நிறைவேற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தற்போதுள்ள அனைத்து பிரதேச சபைகளையும் நகர சபைகளாக மாற்ற முடியுமா என்பது தொடர்பில் ஆராயுமாறு பிரதமர் தினேஸ் குணவர்தனவிடம், அமைச்சரவைக் கூட்டத்தில் வைத்து ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.