நாட்டை முன்னேற்ற இளைஞர்களின் தலைமைத்தும் அவசியம் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
குருணாகல் மாவட்ட மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் “உலகில் ஊழல் நிறைந்த 10 நாடுகளில் இலங்கையும் ஒன்று. நாட்டை முன்னேற்ற இளைஞர்களின் தலைமை அவசியம். அரகலய என்ற போராட்டத்தினால் செய்த புரட்சியை ஒரு போதும் மறக்க முடியாது.
இளைஞர் போராட்டம் இலங்கையில் ஒரு முக்கியமான மற்றும் மதிப்புமிக்க முன்னேற்றம், அத்துடன் ஒரு வரலாற்று நிகழ்வு. புரட்சியை ஏற்படுத்திய இந்த நிகழ்வை மக்கள் மத்தியில் இருந்து மறக்கடிக்க பலர் முயற்சிக்கின்றனர்.
70 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த அனைத்து கட்சிகளையும், 225 நாடாளுமன்ற உறுப்பினர்களையும் மக்கள் நிராகரிக்கின்றனர்.
எனவே புதிய தலைமையும் புதிய தத்துவமும் வேண்டும்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.