அடுத்த வருடம் ஜனவரியில் இடம்பெறவுள்ள அமைச்சரவை மாற்றத்தில் சஜித் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவுள்ளன என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கான பேச்சுகள் வெற்றியளித்துள்ளன எனவும், ஜனவரியில் கட்சிதாவல்கள் இடம்பெறும் எனவும் தெரியவருகின்றது.
அமைச்சரவை மாற்றத்தின்போது தற்போது வெளிவிவகார அமைச்சராக இருக்கும் அலி சப்ரிக்கு நிதி அமைச்சு வழங்கப்படவுள்ளது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அரசமைப்பின் 21ஆம் திருத்தச் சட்டத்தின் பிரகாரம் ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சைத் தவிர வேறு எந்த அமைச்சையும் வைத்துக்கொள்ள முடியாது.
இதற்கமையவே தற்போது வகித்து வரும் நிதி அமைச்சை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அலி சப்ரிக்கு வழங்கவுள்ளார் என கூறப்படுகின்றது.
அத்துடன், ராஜித சேனாரத்ன, ஜீவன் தொண்டமான் ஆகியோருக்கும் அமைச்சு பதவிகள் வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.