ரஷ்யாவின் தாக்குதலை எதிர்கொண்டு வரும் உக்ரைனில் சேதமடைந்த மின்கட்டமைப்பை சீரமைக்க 800 மில்லியன் யூரோ தேவைப்படுவதாக ஐரோப்பிய ஒன்றியத்திற்கு உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உக்ரைனுக்கு உதவுவதற்காக பரிஸில் நடந்த சர்வதேச மாநாட்டில் இக்கோரிக்கையை முன்வைத்த ஜெலன்ஸ்கி, நிதியாக மட்டுமின்றி மின்மாற்றிகள், உயரழுத்த மின்கம்பிகள், ஜெனரேட்டர்கள் போன்றவற்றையும் வழங்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மின்சார கட்டமைப்புகள் சேதப்படுத்தப்பட்டதால் வரும் குளிர் காலத்தை சமாளிக்கும் வகையில் சுமார் இரண்டு பில்லியன் கன மீட்டர் கூடுதல் எரிவாயுவை வழங்க வேண்டுமென ஜி7 நாடுகளுக்கு கோரிக்கை விடுத்த ஜெலன்ஸ்கி போரிட அதிக டாங்கிகள் மற்றும் ஏவுகணைகளை வழங்குமாறும் வலியுறுத்தியுள்ளார்.