அயர்லாந்தின் பிரதமராக லியோ வராத்கர் இரண்டாவது முறையாக மீண்டும் இன்று (சனிக்கிழமை) பதவியேற்கவுள்ளார்.
கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலுக்குப் பிறகு தற்போதைய பிரதமர் மைக்கேல் மார்ட்டினின் கட்சியும் வராத்கரின் கட்சியும் இணைந்து கூட்டணி அரசாங்கத்தை அமைத்தன.
அப்போது பிரதமர் பதவியை இருவரும் சுழற்சி முறையில் ஏற்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி, மைக்கேல் மார்ட்டினின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவுக்கு வருகின்றது. இதற்கமைய இதுவரை துணைப் பிரதமராக இருந்து வந்த லியோ வராத்கர், பிரதமராகப் பொறுப்பேற்கவுள்ளார்.
ஏற்கெனவே அயர்லாந்தின் பிரதமராக கடந்த 2017 முதல் 2020ஆண்டு வரை வராத்கர் பொறுப்பு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.