இரயில் ஊழியர்கள் இன்றும் (சனிக்கிழமை) வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடர்வதால், கிறிஸ்மஸுக்கு முந்தைய கடைசி வார இறுதியில் ரயில் பயணிகள் மேலும் இடையூறுகளைச் சந்திக்க உள்ளனர்.
இரயில்- கடல்சார் மற்றும் போக்குவரத்து தொழிலாளர்களின் தேசிய தொழிற்சங்க உறுப்பினர்கள் தங்களது சமீபத்திய 48 மணிநேர வேலை நிறுத்தத்தின இரண்டாம் பகுதியை நடத்துவதால் பெரும்பாலான சேவைகள் பாதிக்கப்படும்.
மிகவும் அவசியமானால் தவிர இரயில்களில் பயணிக்க வேண்டாம் என்று நெட்வொர்க் ரயில் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
முக்கிய கிறிஸ்மஸ் காலத்தில் வர்த்தகத்தை அதிகரிக்க கடைகள் மற்றும் விருந்தோம்பல் வணிகங்கள் முயலும் போது இந்த வேலைநிறுத்தங்கள் அவற்றை கடுமையாக பாதித்துள்ளன.
பிரித்தானியாவில் உள்ள இரயில் தொழிலாளர்கள் கோடையில் இருந்து ஊதியம், வேலைகள் மற்றும் வேலை நிலைமைகள் தொடர்பான வேலை நிறுத்ததத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே இந்த வாரம் செவ்வாய், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வேலைநிறுத்தங்களை நடத்தியுள்ளனர்.
சனிக்கிழமை இந்த வாரம் வேலைநிறுத்தங்களின் நான்காவது நாள் மற்றும் கோடையில் தொழில்துறை நடவடிக்கைக்கு இரயில்- கடல்சார் மற்றும் போக்குவரத்து தொழிலாளர்களின் தேசிய தொழிற்சங்கம் வாக்களித்ததில் இருந்து 12ஆவது நாளாகும்.
வேலைநிறுத்தம் இல்லாத நாளான ஞாயிற்றுக்கிழமை காலை சேவைகள் பின்னர் தொடங்குவதால் இடையூறு ஏற்பட வாய்ப்புள்ளது.