சீனா போருக்கு தயாராகி வருகின்றபோதும் இந்த அச்சுறுத்தலை இந்திய அரசாங்கம் புறக்கணிக்க முயற்சிக்கின்றது என ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
அருணாசலப் பிரதேசத்தில் இடம்பெற்ற மோதல் குறித்து இந்திய ஒற்றுமை யாத்திரையின் 100 நாளை முன்னிட்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.
இருப்பினும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் கருத்திற்கு பா.ஜ.க தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் எதிர்கட்சிகள் நாட்டிற்கு ஆதரவாக இருப்பதாக கூறி இந்தியாவை இழிவுபடுத்தும் மற்றும் மனஉறுதியை சீர்குலைக்கும் கருத்தை கூறி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
அத்தோடு இந்திய இராணுவத்தை நினைத்து மக்கள் பெருமைப்படுகின்ற நிலையில் ராகுல் காந்தி இவ்வாறு அவமதித்தது கருத்துக்களை வெளியிட கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளனர்.