யாழ்ப்பாணம் – பலாலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அந்தோனிபுரம் பகுதியில் மீன்பிடிக்க சென்ற மீனவர் ஒருவர் காணாமல் போய்யுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு காணாமல் போய்யுள்ள மீனவர் அந்தோணிபுரத்தை சேர்ந்த 56 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த மீனவர் நேற்று பிற்பகல் அந்தோனிபுரம் கடற்றொழிலாளர் சங்கத்திற்கு சொந்தமான படகில் அந்தோணிபுரம் பகுதிக்கு மீன்பிடிக்க சென்றுள்ளார்.
இதேவேளை இவ்வாறு காணாமல் போய்யுள்ள மீனவரை தேடும் நடவடிக்கையை கடற்படையினரும் பொலிஸாரும் ஆரம்பித்துள்ளமை குறிப்பிடதக்கது.