பாகிஸ்தான் அணிக்கெதிரான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.
இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை, இங்கிலாந்து அணி முழுமையாக கைப்பற்றியுள்ளது.
சொந்த மண்ணில் இவ்வாறானதொரு மோசமான தோல்வியை பாகிஸ்தான் சந்திப்பது இதுவே முதல்முறையாகும்.
கராச்சி மைதானத்தில் கடந்த 17ஆம் திகதி ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி 304 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதனைத்தொடர்ந்து பதிலுக்கு முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி, 354 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதனையடுத்து 50 ஓட்டங்கள் பின்னிலையில் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் அணி, 216 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதற்கமைய இங்கிலாந்து அணிக்கு 167 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்த வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய இங்கிலாந்து அணி, 2 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்து 8 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.
இப்போட்டியின் ஆட்டநாயகனாகவும் தொடரின் நாயகனாகவும் இங்கிலாந்தின் ஹரி புரூக் தெரிவுசெய்யப்பட்டார்.