ஒன்லைன் சூதாட்டத் தடை சட்டத்துக்கு ஒப்புதல் தர ஆளுநர் தாமதம் செய்து வரும் நிலையில், சட்டத்தின் 162-ஆவது பிரிவின்படி தடை விதிக்க வேண்டும் என பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
ஒன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்கான சட்டம் இயற்றப்பட்டு 63 நாள்கள் ஆகிவிட்ட நிலையில், அதற்கு ஆளுநர் இன்னும் ஒப்புதல் அளிக்காதது ஏமாற்றம் அளிக்கிறது என்றும் அன்புமணி ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.
சட்ட அமைச்சரும் இந்த கோரிக்கையை விடுத்து 3 வாரங்கள் ஆகின்ற நிலையில் ஒன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்கான மாற்று வழிகளை அரசாங்கம் ஆராய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி தமிழகத்தில் ஒன்லைன் சூதாட்டத்தை தடை செய்து நிர்வாக ஆணை பிறப்பிக்க வேண்டும் என்றும் அன்புமணி ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.