ஐ.நா பாதுகாப்பு சபையின் டிசம்பர் மாதத்திற்கான தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுக்கொண்டுள்ளது.
ஐ.நா. பாதுகாப்பு சபையில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினராகத் அதன் பதவிக்காலத்தில், சபையின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுக்கொள்வது இது இரண்டாவது முறையாகும்.
இந்நிலையில் ‘சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பைப் பராமரித்தல்: சீர்திருத்தப்பட்ட பன்முகத்தன்மைக்கான புதிய நோக்குநிலை’ என்ற தலைப்பில் உயர்மட்ட திறந்த விவாதமொன்று இந்தியா தலைமையில் முன்னெடுக்கப்பட்டும் உள்ளது.
இந்த திறந்த விவாதம் ஐ.நா.உறுப்பினர்களை சீர்திருத்தங்கள் குறித்த உரையாடலை முன்னோக்கி கொண்டு செல்லவதற்கு ஊக்குவிக்கும் என்பதோடு, தற்போதைய நிலையில் ஐ.நாவை அதிக பிரதிநிதித்துவம் மற்றும் செயற்பாட்டு நோக்கத்திற்கு ஏற்றதாக மாற்றுகிறது.
இதேNவைள, இந்தியா, சிரியா மற்றும் ஏமன், ஆகிய நாடுகள் பற்றிய ஐ.நா விசாரணைக் குழு உள்ளிட்ட சில முக்கிய அமைப்புக்களின் கோப்புகள் குறித்து பாதுகாப்புச் சபையில் விவாதம் நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சூடானில் ஐக்கிய நாடுகளின் ஒருங்கிணைந்த நிலைமாற்ற உதவிப் பணி, கொங்கோவில் ஐக்கிய நாடுகளின் அமைப்பின் வழமையான நிலைமைகளை உறுதிப்படுத்தல் பணி உள்ளிட்ட ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான விவகாரங்கள் பற்றி கவனத்தில் கொள்ளப்படவுள்ளது.
அத்துடன், ஐ.நா.ஒருங்கிணைப்பு அலுவலகம், குற்றவியல் தீர்ப்பாயங்களுக்கான சர்வதேச எஞ்சிய வழிமுறை, மத்திய கிழக்கு, தெற்கு சூடானில் உள்ள ஐக்கிய நாடுகளின் பணி, லிபியாவில் உள்ள ஐக்கிய நாடுகளின் ஆதரவு பணி, ஜனநாயகத்தை கட்டியெழுப்பல் ஆகியவை தொடர்பிலும் இந்தியா கவனம் செலுத்தும் என்ற எதிர்பார்க்கப்படுகின்றது.
ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி ருசிரா கம்போஜ், கோதுமை ஏற்றுமதிக்கு முன்னுரிமை அளித்து, ஏமனில் உணவுப் பாதுகாப்பை நிவர்த்தி செய்ய புதுடில்லி நடவடிக்கை எடுத்ததாகக் கூறினார். இராணுவ அணுகுமுறையைக் கைவிடுவதன் மூலமும், துருப்புக்களை விரிவுபடுத்துவதன் மூலமும், நாடு தழுவிய போர்நிறுத்தமாக விரிவுபடுத்துவதன் மூலமும் அமைதிக்கான பாதையைத் தேர்ந்தெடுக்குமாறு அவர் யேமனை வலியுறுத்தினார்.
சபையில் சிரியா குறித்த விவாதங்களின் தொடர்ந்து முன்னேற்றம் இல்லாததை நாங்கள் கவனிக்கிறோம், இந்தியா இரசாயன ஆயுதங்கள் மாநாட்டிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது மற்றும் அதன் முழு, பயனுள்ள மற்றும் பாரபட்சமற்ற அமுலாக்கத்திற்காக உறுதியாக நிற்கிறது’ என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.