மன்னார் பிரதேச செயலகம் மற்றும் மன்னார் கலாச்சார பேரவை இணைந்து நடத்திய 2022 ஆம் ஆண்டுக்கான மன்னார் பிரதேச கலாச்சார விழா இடம்பெற்றுள்ளது.
நேற்று (புதன்கிழமை) வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் வடமாகாண கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தின் அணுசரனையில் இடம்பெற்றது
குறித்த நிகழ்வில் மன்னார் மாவட்டத்திலுள்ள கலைஞர்களுடன் சந்திப்பு, கலை நிகழ்வு,கலைஞர்கள் கௌரவிப்பு மற்றும் வருட வருடம் வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் நிதி அனுசரனையுடன் வெளியிடப்படும் மன்னல் நூல் என்பன இடம்பெற்றன.
குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டிமேல் சிறப்பு விருந்தினர்களாக கிளிநொச்சி அன்னை இல்ல பணிப்பாளர் அருட்தந்தை செபமாலை அன்பு ராசா அடிகளார் ,மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் பரந்தாமன் மற்றும் மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் வினோதன் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.