உக்ரைனில் பயன்படுத்துவதற்காக ரஷ்ய கூலிப்படையான வாக்னருக்கு போர்க்கள ஏவுகணைகள் மற்றும் ரொக்கெட்டுகளை வடகொரியா வழங்கியதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.
இந்த ஏற்றுமதி ஐ.நா பாதுகாப்பு சபையில் தீர்மானங்களை மீறுவதாகவும், மேலும் வாக்னர் மீது கூடுதல் தடைகளை அறிவிக்கும் என்றும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
ஆனால், இந்த செய்திகளை வடகொரியா மற்றும் வாக்னர் குழு ஆகிய முற்றாக மறுத்துள்ளன.
இதுகுறித்து வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் ஜோன் கிர்பி கூறுகையில், ‘உக்ரைனில் தனது இராணுவ நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்க வாக்னர் உலகம் முழுவதும் ஆயுத விநியோகஸ்தர்களைத் தேடுகின்றது.
வட கொரியா வாக்னருக்கு ஆரம்ப ஆயுத விநியோகத்தை முடித்துவிட்டது என்பதை நாங்கள் உறுதிப்படுத்த முடியும், அது அந்த உபகரணங்களுக்கு பணம் செலுத்தியுள்ளது. வாக்னர் ஒவ்வொரு மாதமும் உக்ரைனில் 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவழிக்கின்றது’ என கூறினார்.
உக்ரைனில் கூலிப்படையைச் சேர்ந்த போராளிகள் 1,000 முதல் 20,000 வரை களத்தில் நிறுத்தப்பட்டுள்ளதாக என்று பிரித்தானிய அரசாங்கம் கூறுகிறது.
இந்த குழு சமீபத்தில் சிரியா மற்றும் ஆபிரிக்க நாடுகளிலும் செயற்பட்டு வருகிறது, மேலும் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அதிக குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளது.
பிரித்தானிய வெளியுறவு செயலாளர் ஜேம்ஸ் க்ளெவர்லி, அமெரிக்காவின்; மதிப்பீட்டை பிரித்தானியா ஏற்றுக்கொண்டதாக கூறினார்.
வாக்னர் குழுவின் தலைவர் எவ்ஜெனி பிரிகோஸின், இது வதந்திகள் மற்றும் ஊகங்கள் என்றும், வட கொரியாவின் வெளியுறவு அமைச்சகம் அறிக்கைகளை ஆதாரமற்றது என்றும் அழைத்தது. அதன் நிலைப்பாடு மாறாமல் உள்ளது மற்றும் வட கொரியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான ஆயுத பரிவர்த்தனை ஒருபோதும் நடக்கவில்லை என்று வட கொரிய செய்தித் தொடர்பாளர் கூறினார்.