சீனாவில் தினமும் பத்து இலட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு, நாளாந்தம் 5 ஆயிரம் பேர் உயிரிழப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜனவரி மாதத்தில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 37 இலட்சமாக அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சீனாவின் மக்கள் தொகை சுமார் 140 கோடியாக உள்ள நிலையில் நிலைமை மேலும் மோசமாகலாம் என அஞ்சப்படுகிறது.
சீனாவின் கொரோனா அலை குறித்து லண்டனைச் சேர்ந்த ஆய்வு நிறுவனம் ஒன்று அறிக்கை வெளியிட்டுள்ளது.
எனினும், சீன அரசாங்கம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வமான புள்ளிவிவரப்படி ஒரே நாளில் சுமார் 3 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் மாதத்தில் கொரோனா தொற்று காரணமாக 10 பேர் உயிரிழந்திருப்பதாகவும் சீன அரசாங்கம் அறிவித்துள்ளது.