பெண் ஊழியர்களை வேலைக்கு வருவதைத் தடுக்கும் வகையில் அனைத்து உள்ளூர் மற்றும் வெளிநாட்டு அரசு சாரா நிறுவனங்களுக்கு தலிபான் அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.
பெண்களுக்கான இஸ்லாமிய ஆடைக் குறியீடு குறித்த அரசாங்கத்தின் விளக்கத்தை சிலர் கடைப்பிடிக்காததால் இந்த உத்தரவை அந்நாட்டு பொருளாதார அமைச்சு விடுத்துள்ளது.
ஆகவே மறு அறிவிப்பு வரும் வரை பெண் ஊழியர்கள் வேலைக்கு அனுமதிக்க வேண்டாம் என தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு தலிபான் அரசாங்கம் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை பின்பற்றாத தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் உரிமம் ஆப்கானிஸ்தானில் இரத்து செய்யப்படும் என்றும் தலிபான் அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தான் பல்கலைக்கழகங்களில் பெண்கள் படிப்பதற்கு தலிபான்கள் இடைக்கால தடை விதித்த சில நாட்களுக்குப் பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் மனிதாபிமான நெருக்கடிக்கு மத்தியில் ஆப்கானிஸ்தானில் சேவைகளை வழங்கும் ஐக்கிய நாடுகளின் அமைப்புக்களை இந்த உத்தரவு பாதிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.