மின் உற்பத்தி நிலையம் மற்றும் உருக்கு ஆலை ஒன்றை அமைப்பதற்காக சிரியாவுக்கு 280 மில்லியன் டொலர் கடனுதவி வழங்க இந்தியா முன்வந்துள்ளது.
ஐ.நா பாதுகாப்புச் சபையில் உரையாற்றிய இந்தியாவின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி ருச்சிரா கம்போஜ் இதனைத் தெரிவித்தார்.
இந்தியாவில் கல்வி கற்பதற்கு 1500 சிரிய மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்குவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இரு தரப்பு மற்றும் பல தரப்பு வழிகளில் சிரியாவுக்கு மனிதாபிமான, தொழில்நுட்ப மற்றும் அபிவிருத்தி உதவிகளை இந்தியா தொடர்ந்து வழங்கி வருவதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.