சீனா உள்ளிட்ட 5 நாடுகளின் பயணிகளுக்கு விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற பரிசோதனையில் மிகக்குறைந்த அளவே கொரோனா பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பயணிகளின் எண்ணிக்கையை வைத்து பார்த்தால் பூஜ்யம் புள்ளி அரை சதவீதம் (0.5%) அளவுக்கே கொரோனா பாதிப்புகள் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் மருத்துவ நிபுணர்களும் விமான நிலைய அதிகாரிகளும் நிம்மதிப் பெருமூச்சு விடுகின்றனர்.
கடந்த சனிக்கிழமை காலையில் விமான பயணிகளிடம் பரிசோதனை தொடங்கியது.
டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் மட்டும் 110 வெளிநாட்டுப் பயணிகளுக்கு பரிசோதனை நடத்தப்பட்டது.
இரண்டாவது நாளான நேற்று 345 பேரிடம் சோதனை நடத்தப்பட்டது. அதிர்ஷ்ட்டவசமாக கொரோனா பாதிப்பு அதிகமில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.