அல்லிராஜா சுபாஸ்கரனின் லைக்கா நிறுவனத்தின் பிரமாண்ட பொருட்செலவில் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் பொன்னியின் செல்வன் பாகம் ஒன்று வெளியாகி மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பினை பெற்றிருந்தது.
மறைந்த எழுத்தாளர் கல்கி எழுதி புகழ்பெற்ற வரலாற்றுப் புனைவு நாவலான பொன்னியின் செல்வனை பல ஆண்டுகால முயற்சிக்கு பின்னர் மணிரத்னம் படமாக எடுத்தார்.
இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயம்ரவி, ஜெயராம் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்தனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார்.
இரண்டு பாகங்களாக உருவான பொன்னியின் செல்வனின் முதல் பாகம் அண்மையில் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து நல்ல வரவேற்பை பெற்றது.
இதையடுத்து ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான அப்டேட் இன்று(28) மாலை 4 மணிக்கு வெளியாகும் என படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்திருந்தனர்.
இதற்கமைய ‘பொன்னியின் செல்வன்’ இரண்டாம் பாகம் 2023-ஆம் ஆண்டு ஏப்ரம் 28-ஆம் திகதி வெளியாகும் என படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.
இந்த வீடியோவை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.