தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பில் இதுவரை 90 பேரின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் பல பிரிவுகளின் ஊடாக இவ்விடயம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பில் விசாரணை செய்யும் அதிகாரிகளுக்கும் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவுக்கும் இடையில் நேற்று (புதன்கிழமை) பிற்பகல் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
மரணம் தொடர்பிலான விசாரணைகள் மற்றும் அதன் முன்னேற்றம் குறித்து பொலிஸ் மா அதிபர் அவர்களிடம் கேட்டறிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், விசாரணையில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பொலிஸ் மா அதிபர் அவர்களிடம் உண்மைகளை விளக்கியிருந்தார்.