மத்திய அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ஆறு நாட்கள் பயணமாக, சைப்ரஸ், ஆஸ்திரியா ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியா- சைப்ரஸ் நாடுகளுக்கு இடையேயான நல்லுறவு 60 ஆண்டுகளாகத் தொடர்கின்ற நிலையில், அந்நாட்டு பிரதிநிதிகள் சபையின் தலைவரையும், வெளியுறவு அமைச்சரையும், இந்திய வம்சாவளியினரையும் சந்தித்து அமைச்சர் ஜெய்சங்கர் கலந்துரையாடவுள்ளார்.
அங்கிருந்து ஆஸ்திரியா செல்லும் அவர் அந்நாட்டின் ஐரோப்பிய மற்றும் சர்வதேச விவகார அமைச்சரை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
இந்த இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவு 75ஆவது ஆண்டை எட்டுகிறது. அத்துடன், 27 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய வெளியுறவு அமைச்சர் ஆஸ்திரியாவுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்வது இதுவே முதல் முறையாகும்.