நாட்டில் இதுவரை பின்பற்றப்பட்ட சுகாதாரப் பழக்க வழக்கங்களை முன்னரை விடவும் சிறப்பாக பின்பற்ற வேண்டும் என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
உலகின் பல நாடுகளில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், இலங்கையும் இந்த விடயம் தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
கொரோனா தொற்று தற்போது ஒரு பாரதூரமான பிரச்சினையாகத் தோன்றவில்லை என்றாலும், அது முடிவுக்கு வராததால் கொரோனா மீண்டும் தலைதூக்கும் அபாயங்கள் இருப்பதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.