யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்கள் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அவருக்கான பிரியாவிடை நிகழ்வு இன்று யாழ். மாவட்ட செலயலகத்தின் கேட்போர் கூடத்தில், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன் தலைமையில் நடைபெற்றது
கணபதிப்பிள்ளை மகேசன் அவர்கள் பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் கீழ் உள்ள மட்டக்கிளப்பு மாவட்ட செயலாளராகவும், வெளிநாட்டு விவகார அமைச்சின் திணைக்கள பணிப்பாளராகவும் கடமையாற்றி தற்போது யாழ். மாவட்ட அரசாங்க அதிபராக கடமையாற்றியமை குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வில் யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் முரளிதரன் (காணி) மற்றும் திட்டமிடல் பணிப்பாளர் நீக்ளஸ்ப்பிள்ளை, விவசாயப் பணிப்பாளர் வாசுகி கமலலேஸ்வரன், சமுர்த்திப்பணிப்பாளர் திவாகரன் ப,உள்ளிட்ட பதவிநிலை உயர் அதிகாரிகள், பிரதேச செயலர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக அலுவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.