புதிய ஆண்டில் இருந்து தனியார் நிறுவன ஊழியர்களின் நாளேடு காட்சிப்படுத்துவதுடன் அதில் ETF, EPF இலக்கம் காட்சிப்படுத்தப்பட வேண்டும் என வடமாகாண தனியார் ஊழியர் சங்கத்தின் தலைவர் சாமிநாதன் சிவகுமார் தெரிவித்துள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
தனியார் நிறுவனங்களில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு அடிப்படை சம்பளம் 17 ஆயிரம் ரூபாயாக இருக்கின்ற போதிலும், பல இடங்களில் அதனையும் விட குறைவான சம்பளம் வழங்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.
அத்துடன், குறிப்பாக புடவைக்கடைகளில் வேலை செய்யும் பெண் பிள்ளைகளுக்கு 8 ஆயிரம் சம்பளம் வழங்கப்படுவதாகவும் இவ்வாறான செயற்பாடுகளை நிறுவனங்கள் தவிர்க்க வேண்டும் இல்லையெனில் சட்ட நடவடிக்கை எடுக்கபடும் என எச்சரித்தார்.