பணி இடமாற்றம் பெற்றுச் செல்லும் வட மாகாண பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி டி.டி.டி.கே ஹெட்டியாராச்சியை கௌரவிக்கும் நிகழ்வு யாழ். கலட்டியில் உள்ள சரஸ்வதி மண்டபத்தில் இடம் பெற்றது.
நேற்று (வெள்ளிக்கிழமை) தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்திற்கான கட்டுப்பாட்டு பிரதிநிதி கருணாகரன் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பணியிடமாற்றம் பெற்றுச் செல்லும் பொலிஸ் விசேட அதிரடி அடிப்படையின் வட மாகாண கட்டளை அதிகாரி டிடிடிகே ஹெட்டியாராச்சி பொன்னாடை போர்து மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டார்.
இதேவேளை குறித்த நிகழ்வில் மட மாகாண பிரதம செயலாளர் சமன் பந்துல சேன ,யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன், யாழ் போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் பவானந்தராஜா, வடமாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் பிரியந்த மற்றும் மதத் தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.