மின்கட்டண அதிகரிப்பு, மின் விநியோக துண்டிப்பு ஆகியவற்றினால் சிறு மற்றும் நடுத்தர தொழிற்துறை பாதிக்கப்பட்டுள்ளதாக உதய கம்மன்பில தெரிவித்தார்.
இவ்வாறு நெருக்கடியில் இருந்து மீள்வதற்காக அரசாங்கம் எடுக்கும் தீர்மானங்கள் அனைத்தும் மக்களை நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் இருப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.
ஆகையால் எதிர்வரும் மார்ச் மாதமளவில் நாட்டில் மீண்டும் போராட்டம் தோற்றம் பெற அதிக வாய்ப்புள்ளது என்றும் உதய கம்மன்பில தெரிவித்தார்.
இதேவேளை உள்ளூராட்சித் தேர்தலை இனியும் பிற்போடாமல் அடுத்த மாதம் நிச்சயம் தேர்தலை நடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
தேர்தலை எதிர்கொள்ள நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் அரசியல் கட்சிகளை ஒன்றிணைத்து கூட்டணியை ஸ்தாபிக்க உள்ளதாகவும் உதய கம்மன்பில தெரிவித்தார்.