பேரழிவு தரும் வெள்ளத்தை அடுத்து பிலிப்பைன்ஸில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 51ஆக உயர்ந்தது மற்றும் 19 பேர் காணவில்லை.
தெற்கு மிசாமிஸ் ஆக்சிடென்டல் மாகாணத்தில் வசிப்பவர்கள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் தற்போது அவசரகால முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
கடலோர கிராமமான கபோல்-அனோனனில், தென்னை மரங்கள் வேரோடு பிடுங்கப்பட்டு, லேசான பொருட்களால் செய்யப்பட்ட குடிசைகள் ஏறக்குறைய தரைமட்டமாக்கப்பட்டன.
தேசிய பேரிடர் இடர் குறைப்பு மற்றும் மேலாண்மை சபையின் படி, வடக்கு மின்டானாவ் பகுதி பேரழிவின் முக்கியப் புள்ளியாக உள்ளது. அங்கு 25பேர் உயிரிழந்துள்ளனர்.
இறந்தவர்களில் பெரும்பாலானவர்கள் நீரில் மூழ்கி மற்றும் நிலச்சரிவினால் இறந்தவர்கள் ஆவர் காணாமல் போனவர்களில் படகுகள் கவிழ்ந்த மீனவர்களும் அடங்குவர்.
பெரும்பாலான பகுதிகளில் வெள்ளம் குறைந்துள்ளது, ஆனால் 8,600க்கும் மேற்பட்ட மக்கள் இன்னும் தங்குமிடங்களில் உள்ளனர்.