தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் தேர்தலுக்காக 20 பில்லியன் செலவழித்து 8 ஆயிரம் பேருக்கு சம்பளம் வழங்க முடியுமா என வஜிர அபேவர்த்தன கேள்வி எழுப்பியுள்ளார்.
எதிர்க்கட்சிகள் பணம் அச்சிட்டாவது தேர்தலுக்கு செல்ல வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்தால் அது நாட்டை அராஜக நிலைக்கு கொண்டு செல்லும் என்றும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்த வருடத்தில் பொருளாதார பிரச்சினைக்கு தீர்வு காண்பதே ஜனாதிபதியின் இலக்கு. என்றும் அதற்கு அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை நாட்டின் தேசிய பிரச்சினைக்கு தீர்வுகாண ஜனாதிபதி அனைத்து கட்சிகளுக்கும் விடுத்திருந்த போதும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்தும் அலட்சியப்படுத்திவருவதாக வஜிர அபேவர்த்தன சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில் தேர்தலை நடத்துமாறு வற்புறுத்தி நாட்டை பலப்படுத்தும் ஜனாதிபதியின் எதிர்பார்ப்புக்களை இல்லாமலாக்க வேண்டாம் என்றும் வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.