காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கன்னியாகுமரியில் தொடங்கி, காஷ்மீர் வரை இந்தியா ஒற்றுமை யாத்திரை நடத்தி வருகிறார்.
இன்று அவரது யாத்திரை உத்தரபிரதேச மாநிலத்தில் நடந்து வருகிறது. அடுத்து பஞ்சாப் மாநிலத்துக்கும் செல்ல உள்ளது.
இதற்கிடையே பஞ்சாபில் தடை செய்யப்பட்ட சீக்கிய அமைப்புகள் ராகுல் பாத யாத்திரைக்கு இடையூறு செய்வோம் என்று எச்சரித்துள்ளன.
இதையடுத்து ராகுல் காந்தி யாத்திரைக்கு அதிக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.



















