உள்ளூராட்சி சபைத் தேர்தல் பொதுஜன பெரமுனவுக்கு சவாலான தேர்தல் அல்ல என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை கொழும்பில் இன்று(திங்கட்கிழமை) செலுத்தியதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
எந்த சந்தர்ப்பத்தில் நடத்தப்பட்டாலும் உள்ளூராட்சி சபைத் தேர்தலை எதிர்கொள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.