தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று(செவ்வாய்கிழமை) கொழும்பில் சம்பந்தனின் இல்லத்தில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது தமிரசு கட்சியின் மத்திய குழு வெளிப்படுத்திய கருத்து நிலைப்பாட்டை மாவை சேனாதிராஜா உறுதியாகப் பற்றி நிற்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
புதிதாக தமிழ் கூட்டமைப்பை ஒரு கட்சியாக பதிவு செய்யும் நடவடிக்கையை மேற்கொள்வதில்லை.
பங்காளிக் கட்சிகள் தவிர்ந்த வேறு தரப்புகளை உள்ளூராட்சி சபைத் தேர்தலின் போது கூட்டுச்சேர்த்துக் கொள்வதில்லை.
பங்காளிக் கட்சிகளுடன் உரையாடி வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பொருத்தமான இடங்களில் தனித்தனியாக வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தும், அதேசமயம் ஒரு மேடையில் பிரசார நடவடிக்கைகளை முன்னெடுத்தும், தேர்தலில் ஈடுபடுவது குறித்தும் தீர்மானிக்க வேண்டும் போன்ற தீர்மானங்களை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு எடுத்திருந்தது.
இந்த முடிவுகளை கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா முழு அளவில் பற்றி நிற்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.