காபூலில் ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்திற்கு வெளியே நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் பலத்த உயிர்சேதம் ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்துவரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
குறைந்தது ஐந்து பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ள போதும், இந்த தாக்குதலில் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தலிபான் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
துருக்கி, சீனா உள்ளிட்ட பல நாடுகள் தூதரகங்களைக் கொண்டுள்ள இப்பகுதியில், உள்ளூர் நேரப்படி சுமார் 16:00 மணியளவில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.
தற்கொலைக் குண்டுத்தாரி, அமைச்சக கட்டடத்திற்குள் நுழைய முயற்சித்தபோது, தடுக்கப்பட்டதால் அவர் வெளியே தன்னைத்தானே வெடிக்கச் செய்ததாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.
கட்டடம் பெரியளவில் சேதமடையவில்லை எனவும் வெடிவிபத்தில் அருகில் உள்ள உள்துறையின் ஜன்னல் கண்ணாடிகள் நொறுங்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஐ.எஸ்.ஐஸ்-கே எனப்படும் இஸ்லாமிய அரசு குழுவின் உள்ளூர் கிளை, இந்த தாக்குதலை நடத்தியதாகக் பொறுப்பேற்றது.
ஆனால், காபூலில் உள்ள இத்தாலிய மனிதாபிமான நிறுவனம், அவசரகால தன்னார்வ தொண்டு நிறுவனம், 40க்கும் மேற்பட்ட காயமடைந்தவர்களை பெற்றுள்ளதாகவும், உயிரிழப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் கூறியது.
இந்த தாக்குதலை கோழைத்தனமானது என விவரித்த காபூல் பொலிஸார், குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்று அறிக்கையில் கூறியுள்ளனர்.
தாக்குதல் நடந்த நேரத்தில் வெளியுறவு அமைச்சக கட்டடத்திற்குள் ஆப்கானிஸ்தான் அதிகாரிகளுடன் சீன தூதுக்குழு பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக முந்தைய தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், வெளிநாட்டவர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை என்று பிரதமர் அலுவலகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.
அண்டை நாடுகளில் இருந்து தலிபான்கள் முதலீட்டை ஈர்க்க முயற்சிக்கும் நேரத்தில், சமீபத்திய மாதங்களில் வெளிநாட்டினர் அல்லது வெளிநாட்டு நலன்களை குறிவைத்து தொடர்ச்சியான தாக்குதல்கள் நடந்துள்ளன.
கடந்த ஆண்டு தலிபான்கள் அதிகாரத்தைக் கைப்பற்றியதில் இருந்து ஐ.எஸ்.ஐஸ்-கே எனப்படும் இஸ்லாமிய அரசு குழு தொடர்ச்சியாக தாக்குதல்களை நடத்தி வருகின்றது.
இதுபோன்ற சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை தலிபான்கள் குறைத்து மதிப்பிடுவதாக ஊடகவியலாளர்கள் கூறுகின்றனர்.