கிரிப்டோகரன்சிகள் அப்பட்டமான சூதாட்டம் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கடுமையாக விமர்சித்துள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘ஒவ்வொரு சொத்துக்கும் மதிப்பு இருக்க வேண்டும். ஆனால் கிரிப்டோகரன்சிகளைப் பொருத்தவரை, அவற்றுக்கு எந்த மதிப்பும் கிடையாது. அவற்றின் சந்தை மதிப்பு உயர்வதும், ஒரு கற்பனையான விஷயத்தை உண்மை என நம்ப வைப்பதை அடிப்படையாகக் கொண்டது.
எனவே எந்தவொரு மதிப்பும் இல்லாத, நம்புவதை மட்டுமே சார்ந்துள்ள செலாவணி என்பது எந்தவித ஆதாரமும் இல்லாத 100 சதவீத ஊகமே தவிர வேறொன்றுமில்லை. அப்பட்டமாகக் கூறினால், அது சூதாட்டம்’ என கூறினார்.