சீனாவுடனான இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை முதல் முறையாக 8 லட்சம் கோடி ரூபாய்யைக் கடந்துள்ளது.
அதாவது சீனாவுக்கு இந்தியா ஏற்றுமதி செய்ததைவிட 8 லட்சம் கோடி ரூபாய் அதிகமாக அந்நாட்டில் இருந்து இறக்குமதி செய்துள்ளது.
கடந்த ஆண்டில் இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சுமார் 10.8 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. கடந்த 2021ஆம் ஆண்டில் வர்த்தக மதிப்பு சுமார் 10 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.
இந்தியாவுக்கான சீனாவின் ஏற்றுமதி கடந்த ஆண்டில் சுமார் 9.6 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. இது 2021ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 21.7 சதவீதம் அதிகம். அதே வேளையில், சீனா இறக்குமதி செய்த இந்தியப் பொருள்களின் மதிப்பு கடந்த ஆண்டில் சுமார் 1.4 லட்சம் கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது. இது 2021ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 37.9 சதவீதம் குறைவாகும்.
2021ஆம் ஆண்டில் இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக இடைவெளி சுமார் 5.6 லட்சம் கோடி ரூபாயாக மட்டுமே இருந்தது. ஆனால் கடந்த ஆண்டில் அது சுமார் 8.2 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.