உலகமெங்கும் வாழும் இந்துக்கள் நாளை (ஞாயிற்றுக்கிழமை) உழவர் திருநாளினை கொண்டாடுவதற்கு ஆயத்தமாகி வருகின்றனர்.
இந்த நிலையில் மலையகப்பகுதிகளிலும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் தைப்பொங்களினை கொண்டாடுவதற்கு மலையக மக்கள் ஆயத்தமாகி வருகின்றனர்.
மலையக பகுதியில் மக்கள் இம்முறை தைப்பொங்களினை சமய சம்பிரதாயங்களுக்கு முக்கியத்துவமளித்து கொண்டாடுவதற்கு ஆயத்தமாகி வருகின்றனர்.
இந்தநிலையில், தைப்பொங்களினை முன்னிட்டு மக்கள் பூசை பொருட்களையும் அத்தியவசிய பொருட்களையும் கொள்வனவு செய்வதற்காக மலையக நகரங்களுக்கு மக்கள் வருகை தந்திருந்தனர்.
தைத்திருநாளினையொட்டி பூஜை பொருட்களையும், அத்தியாவசிய பொருட்களையும் சூரிய பொங்கல் வைப்பதற்காக பலர் புதுப்பானயினையும், பழங்களையும் கொள்வனவு செய்வதை காணக்கூடியதாக இருந்ததையும் காணக்கூடியதாக இருந்தது.