உக்ரைன் முழுவதும் பல இலக்குகளை குறிவைத்து ரஷ்யா புதிதாக ஏவுகணை தாக்குதல்களை நடத்தியுள்ளது.
தாக்குதல் காரணமாக டினிப்ரோவில் குறைந்தது 14 பேர் உயிரிழந்துள்ளதாகவும் கிய்வ் மற்றும் கார்கிவ் பிராந்தியங்களில் மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று சனிக்கிழமையன்று நடந்த இந்த தாக்குதல்கள் டினிப்ரோவில் உள்ள ஒன்பது மாடி குடியிருப்பு முற்றிலும் சேதமடைந்துள்ளதாக அதிகாரிங்கள் கூறியுள்ளனர்.
இறந்தவர்களில் 15 வயது சிறுமியும் அடங்குவதாகவும் 6 சிறுவர்கள் உட்பட 27 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் உக்ரைன் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
தொடர் தாக்குதலினால் துரதிர்ஷ்டவசமாக, ஒவ்வொரு மணி நேரமும் இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என உக்ரைன் ஜனாதிபதி கூறியுள்ளார்.