இலங்கை மற்றும் இந்திய அணிகள் மோதும் மூன்றாவதும் இறுதியான ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறவுள்ளது.
திருவனந்தபுரம் மைதானத்தில் இடம்பெறும் இப்போட்டியில் இலங்கை அணிக்கு தசுன் ஷானகவும் இந்திய அணிக்கு ரோஹித் ஷர்மாவும் தலைமை தாங்கவுள்ளனர்.
ஏற்கனவே நடைபெற்று முடிந்த இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்று இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கின்றது.
இந்த தொடர் நிறைவு பெற்றதும் இந்திய அணி அடுத்த வாரம் நியூசிலாந்து அணியை எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.