அறிவிக்கப்பட்டுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைக்க கூடிய மூன்று சந்தர்ப்பங்கள் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவரும் தேர்தல் எல்லை நிர்ணய குழுவின் தலைவருமான மஹிந்த தேசப்பிரிய தெளிவுபடுத்தியுள்ளார்.
நீதிமன்றத்தின் உத்தரவு, நீதிமன்ற உத்தரவினை ஏற்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானம் மற்றும் தேர்தல் சட்டத்தில் உள்ள அதிகாரங்களின் அடிப்படையில் தேர்தல் ஆணைக்குழு எடுக்கும் முடிவு ஆகியவற்றின் அடிப்படையிலேயே வாக்கெடுப்பை ஒத்திவைக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பொது நிர்வாக அமைச்சின் செயலாளரினால் வெளியிடப்பட்ட கடிதம் வெறும் காகித துண்டு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.