ஜி20 இற்கான தலைமைத்துவத்தினை வழங்கும் இந்தியா தனது தலைமையின் கீழ் நிகழ்ச்சி நிரலை அமைப்பதில் மிகவும் திறமையாக உள்ளது என்று நெதர்லாந்தின் ஜி20 பிரதிநிதி அலெக்ஸாண்ட்ரா லூயிஸூன் தெரிவித்துள்ளார்.
நிதி உள்ளடக்கத்துக்கான குளோபல் பங்காளர்கள் கூட்டமானது கொல்கத்தாவில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
இந்நிலையில், அதிலொருவரான அலெக்ஸாண்ட்ரா லூயிஸூன், ‘இந்தியா நிகழ்ச்சி நிரலை அமைப்பதிலும், விவாதங்களுக்கு நம்மை வழிநடத்துவதிலும் மிகவும் திறமையாக இருந்ததாக நான் நினைக்கிறேன். இச்செயற்பாடுகள் மிகவும் சிந்திக்கப்பட்டதாகவே நினைக்கிறேன், இரண்டு நாட்களில் அற்புதமான அனுபவம் கிட்டது. மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது, இந்தியா பிரதிநிதிகளுக்கு மிகவும் தாராளமான மனநிலை இருக்கிறது.
விருந்தோம்பல் அபரிமிதமானது, ஹைதராபாத்தில் நடைபெறும் சந்திப்பிற்காக மீண்டும் இந்தியா வரவுள்ளேன் என்றார்.
இதேவேளை, இந்தோனேசியாவைச் சேர்ந்த பிரதிநிதி ஒருவர் இந்தியாவின் டிஜிட்டல் மற்றும் நிதித்துறையைப் பாராட்டினார்.
நாடு மிகவும் நன்றாக உள்ளது. தலைவர் பதவிக்கு இந்தியா ஒரு நல்ல உதாரணம் கொரோனா தொற்றுநோய்க்குப் பிறகு இந்தோனேசியாவிற்கு டிஜிட்டல் உள்கட்டமைப்பு மிக முக்கியமானது. அதற்கு இந்தியாவின் பங்களிப்பு துணையானது என்றார்.
பங்களாதேஷ் ஜி20 இன் அங்கத்துவத்தினைக் கொண்டிருக்காதபோதும் எமது நாட்டை இந்த நிகழ்விற்கு அழைத்ததற்காக இந்தியாவிற்கு நன்றி தெரிவித்தார்.
நிதி உள்ளடக்கம் தொடர்பான கருத்துக்களை பரிமாறிக்கொள்ள இது சரியான மன்றம் இதுவாகும். பங்களாதேஷ் நிதி உள்ளடக்கத்தில் இந்தியா நிறையவே பங்களிப்புச் செய்துள்ளது.
எமது நாட்டின் அடிமட்டத்தில் உள்ள மக்களுக்கு இது மிகவும் துணையாக இருக்கும் என்று பங்களாதேஷ் பிரதிநிதி கூறினார்.
ஜேர்மனியைச் சேர்ந்த ஜி20 பிரதிநிதி மான்ஃப்ரெட் ஆஸ்டர், இந்தியாவின் ஜி20 தலைவர் பதவியை அதிக எதிர்பார்ப்புகளுடன் எதிர்நோக்குகிறோம் உலக நாடுகளின் முதலீட்டில் முக்கிய பங்கு வகிக்க இந்தியா சிறந்த இடமாகும்.
‘ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரு எதிர்காலம்’ நம்பிக்கைக்குரியதாகத் தெரிகிறது. ஜேர்மனியும் இந்தியாவும் ஒரு மூலோபாய கூட்டுறவைக் கொண்டுள்ளன. என்றார்.