சீனாவும் இந்தியாவும் தங்களின் கடன்களை மறுசீரமைக்க உடன்படவேண்டும் என இலங்கை மத்திய வங்கி மீண்டும் தெரிவித்துள்ளது.
மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பில்லியன் கணக்கான டொலர் கடனை குறைக்க சீனாவும் இந்தியாவும் ஒப்புக் கொள்ளும் வரை சர்வதேச நாணய நிதியம் பணத்தை வழங்காது என்பதோடு அனைத்துத் தரப்பினரும் விரைவாகச் செயல்படுவது சிறந்தது என்றும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இலங்கைக்கு வரும் முதலீட்டாளர்களின் நம்பிக்கைக்கு இவ்வாறான நிலை நல்லதல்ல எனவும் மத்திய வங்கியின் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.