பேலியகொடை கறுப்பு பாலத்திற்கு அருகில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
32 வயதான ஒருவரே இதன்போது காயமடைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
வீட்டிலிருந்த குறித்த குறித்த நபர் மீது, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர் சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

















