சமூக – பொருளாதார மாற்றத்திற்கான அரசாங்க முயற்சிகளுக்கு ஆதரவாக ஜம்மு மற்றும் காஷ்மீரின் இளம் தன்னார்வலர்களை ஊக்குவிப்பது, ஈடுபடுத்துவது மற்றும் அணிதிரட்டுவது ஆகியவற்றில் ‘மிஷன் யூத்’ என்ற திட்டம் அதிகளவில் கவனம் செலுத்தியுள்ளது.
மிஷன் யூத் முன்முயற்சியின் கீழ், இளம் தலைமுறையினருக்கு சமூகத்திற்கு பங்களிப்பதற்கும் சுய வளர்ச்சியை அடைவதற்கும் ஒருவாய்ப்பை வழங்குகிறது என்று அதிகாரி கூறினார்.
பஞ்சாயத்துகள், மாவட்ட நிர்வாகத்தின் ஆற்றல் மிக்க மற்றும் துடிப்பான பங்காளிகள் என்ற வகையில், குறித்த திட்டம் அடிமட்டமளவில் சென்றடைவதை உறுதி செய்கின்றன.
இளைஞர் கழகங்கள் மூலம், அரசாங்கம் பல்வேறு வேலைவாய்ப்பு மற்றும் சுயவேலைவாய்ப்பு திட்டங்கள் பற்றிய விழிப்புணர்வை உருவாக்குவது மட்டுமல்லாமல், இளைஞர்கள் மற்றும் பெண்களை அவர்களின் கனவுகளைத் அடைவதற்கும் ஒன்றிணைக்கிறது என்று அந்த அதிகாரி மேலும் கூறினார்.
சமூக சேவையில் இளைஞர்களின் அர்ப்பணிப்பு, தேசிய ஒருமைப்பாடு ஆகியவை வளர்ப்பதற்கு இந்தத் திட்டம் அடித்தளத்தை வழங்குகிறது என்று அந்த அதிகாரி கூறினார்.
‘74,000 இற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் ஆயிரக்கணக்கானோருக்கு நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக மாறியுள்ளனர்.
இளைஞர்கள் இப்போது அமைதியான மற்றும் வளமான ஜம்மு காஷ்மீரை உருவாக்கும் செயற்பாட்டில் தீவிர பங்காளிகளாக உள்ளனர்,’ என்று அவர் மேலும் கூறினார்.
20 மாவட்டங்களைச் சேர்ந்த 74,771 இற்கும் மேற்பட்ட இளைஞர்கள் இளைஞர் கழகங்களில் இணைந்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
இளைஞர்கள் உண்மையான சவால்களை எதிர்கொண்டு செயற்படுவதற்கும் அர்த்தமுள்ள மாற்றத்தை ஏற்படுத்துவதற்கும் வாய்ப்பளிப்பதில் குறிப்பிடத்தக்க பங்கினை ஆற்றி வருகின்றனர்.
20 மாவட்டங்களில் மொத்தம் 4,522 இளைஞர் கழகங்கள் அமைக்கப்பட்டுள்ளன, அதிகபட்சமாக 9,000 இளைஞர்கள் பூஞ்ச்மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
தன்னார்வத் தொண்டு செய்யும் இந்தக் கழகங்களில் உள்ள இளைஞர்கள், தலைவர்களாகவும், மாற்றங்களை உருவாக்குபவர்களாகவும், தொடர்ந்து குடிமை அடையாளத்தை வளர்த்துக் கொள்கிறார்கள், எனவே சமூக ரீதியாக மிகவும் சுறுசுறுப்பாக மாறுகிறார்கள்.
கல்வியாளர்கள், பணியிடங்கள் மற்றும் அவர்களின் தனிப்பட்ட வாழ்வில் வெற்றிபெற இன்றியமையாத ஒத்துழைப்பு மற்றும் சிக்கல்களைத் தீர்ப்பது போன்ற புதிய சமூகத் திறன்களையும் அவர்கள் கற்றுக்கொள்கிறார்கள்.