ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் குடியிருப்பு கட்டடங்களின் மேற்கூரைகளில் சூரியசக்தி சேமிப்பு வலையமைப்புக்களை நிறுவுவதற்கு 25ச தவீத மானியம் அறிவித்ததை அடுத்து, காஷ்மீர் பள்ளத்தாக்கில் மேற்கூரை அவற்றுக்கான தேவைகள் அதிகரித்துள்ளன.
காஷ்மீர் சக்தி விநியோக கூட்டுறவு நிறுவனமானது, பள்ளத்தாக்குக்கு மொத்தம் 1,700 மெகாவாட் மின்சாரத்தை வழங்கி வருவதால், காஷ்மீரில் மாதாந்த மின்கட்டணமும், மின்சாரக்குறைப்பும் மிகப்பெரிய அளவில் அதிகரிப்பதற்கான காரணங்களில் ஒன்றாகும்.
குறித்த திட்டம் எதிர்வரும் நவம்பர் இறுதிக்குள் முடிக்கப்பட வேண்டும், ஆனால் இது தொடங்கியவுடன், மக்கள் அதை நோக்கி விரைவாக நெருங்கி வருகின்றனர்.
ஸ்ரீநகரில் குறித்த வலையமைப்புக்களை விற்பனை செய்யும் தொழிலதிபர் ஒருவர், கடந்த இரண்டு ஆண்டுகளாக தனது தொழில் நட்டத்தில் இயங்கி வருவதாகவும், ஆனால் நிர்வாகம் விடுத்த அறிவிப்பை அடுத்து அது மேம்பட்டுள்ளதாகவும் கூறினார்.
காஷ்மீரில் தற்போது அதிகளவான மக்கள் சூரிய சக்தியில் இயங்கும் சாதனங்களை கொள்வனவு செய்து வருகின்றனர்.
அவற்றைப் பயன்படுத்துவதன் மூலம் மின்பற்றாக்குறையை சமாளிப்பதுடன் மலிவு விலையிலும் கிடைக்கிறது என்று மக்கள் நம்புகின்றார்கள்.
ஜம்மு காஷ்மீர் எரிசக்தி மேம்பாட்டு முகாமை அதிகாரிகளின் கூற்றுப்படி, யூனியன் பிரதேசத்தில் சூரிய சக்தியை ஊக்குவிக்க பல திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இன்னும் பல விடயங்கள் பரிசீலனையில் உள்ளன என்றும் தெரிவிக்கப்படுகின்றன.